நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சிம்பு
1 வயதில் இருந்து சினிமாவில் நடிக்க துவங்கிய சிம்புவின் 41வது பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து சிம்புவின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.

சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தன்னுடைய 48வது படத்திற்காக தயாராகி வருகிறார்.

எஸ்.டி.ஆர் 48 படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இன்று சிம்புவின் பிறந்தநாள் என்பதினால் அப்படத்தின் First லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

1 வயதில் இருந்து நடிக்க துவங்கிய சிம்பு, நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடகர் போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார். மேலும் தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்க நடிக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து மதிப்பு
இந்நிலையில், 41வது பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சிம்புவின் முழு சொத்து மதிப்பு ரூ. 150 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.