தமிழ் சினிமாவில் விஜயின் இடத்தை நிரப்ப போவது யார்?

விஜய் அரசியல் வருகை
தளபதி விஜய் அரசியல் கட்சி துவங்கிய விஷயம் தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அரசியலில் முழு கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்தும் விலகப்போவதாக கூறியுள்ளார்.

இதுவரை கமிட் செய்து வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என கூறப்பட்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகையின் காரணமாக சினிமாவில் அவருடைய இடத்தை வேறு யார் பிடிக்க போகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அடுத்த தளபதி யார்
வசூலில் பட்டையை கிளப்பி வரும் ஹீரோவாக இருக்கும் விஜய், தற்போது அரசியலில் களமிறங்குவதன் காரணமாக, இனி தமிழ் சினிமாவில் விஜய்யின் இடத்தில் யார் இருக்க போகிறார் அடுத்த தளபதி யார் என்று பேச்சு எழுந்துள்ளது.

தனக்கென்று பெரும் அளவிலான ரசிகர்கள் பட்டாளத்தையும், குடும்ப ரசிகர்களையும் ஈர்க்கும் கதாநாயகனால் மட்டுமே விஜய்யின் இடத்தை பிடிக்க முடியும் என்பதே பலருடைய கருத்தாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.