நடிகர் சூர்யா
இந்தியளவில் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கவுள்ள இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
திரையுலக நடிகர், நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு
அதன்படி, 2024ல் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 250 கோடி இருக்குமாம். இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 20 முதல் ரூ. 25 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் சூர்யா மும்பையில் தற்போது வாங்கியுள்ள புதிய வீட்டின் மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது. BMW 7 Series – ரூ. 1.38 கோடி, Audi Q7 – ரூ. 80 லட்சம், Mercedes-Benz M-Class – ரூ. 60 லட்சம் போன்ற விலைஉயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகிறார்