விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சமுத்திரகனி!

தமிழ்த்திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்கான பல நல்ல பணிகளை செய்து வருகிறார்.

இவர் அரசியல் கட்சியில் இருப்பது போன்றே தன் இயக்கத்தில் பல அணிகள் உருவாக்கி மக்களுக்கான பணிகளை செய்து வந்தார்.

 

சமீபத்தில் புயல் மழை வெள்ளம் என அடுத்தடுத்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று பொது மக்களுக்கான உதவித்தொகை மற்றும் அதனுடன் அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வைத்தார்.

அந்த வகையில் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்ததுள்ளதாக சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் 2026ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என விஜய் தெரிவித்தார்.

விஜய்க்கு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் பொது மக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமுத்திரக்கனி
அந்த வகையில் நடிகர் சமுத்திரக்கனி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் சமுத்திர கனி குறிப்பிட்டு இருப்பது என்னவெனில், ‘திரை உலகில் உச்சத்தின் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன் பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்’ என பதிவிட்டுள்ளார்.