சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தனது தாலி உள்ளிட்ட தனது மாமியார் வீட்டில் இருந்து போட்ட அனைத்து நகைகளையும் கழட்டி தனது மாமியாரிடம் கொடுத்துவிட்டார்.
அப்போது தனது கணவர் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து புது தாலி வாங்கி கொடுப்பார், அதுவரை எந்த நகையும் எனக்கு தேவையில்லை என மீனா கூறியிருந்தார்.
தாலி வாங்கி கொடுத்த முத்து
அதன்படி, வரும் வாரத்தில் தனது மனைவி மீனாவிற்கு புதிய தாலி ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டார் முத்து. மீனா சொன்னதுபடியே முத்து தாலி வாங்கி கொடுத்துவிட்டு அனைவரின் முன்பும் சவாலில் ஜெயித்ததால், விஜயாவின் முகம் சுருங்கிப்போய்விட்டது.
ஏற்கனவே மீனாவை கண்டாலே எறிந்துவிலும் விஜயா, அவர் சபதத்தில் வென்றுவிட்டார், ஆகையால் கண்டிப்பாக இனி வரும் நாட்களில் மீனாவிற்கும், விஜயாவிற்கும் இடையே வேற லெவல் சம்பவம் இருக்கு.