பள்ளியில் சூர்யா மகள் தியா செய்த விஷயம்

சூர்யா – ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் சூர்யா – ஜோதிகா. காதலித்து திருமணம் செய்துகொண்டா இந்த ஜோடிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர்.


இவர்கள் இருவருடைய படிப்பிற்காக தான் சூர்யா, ஜோதிகா மும்பையில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். அது முடிந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவோம் என ஜோதிகா கூறியிருந்தார்.


பெருமை சேர்த்த மகள்
இந்நிலையில், சூர்யா, ஜோதிகா மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அப்போது தியா தனது அணியுடன் இணைந்து Sports Day கோப்பையை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜோதிகா பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு ‘உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை’ என கூறியுள்ளார் ஜோதிகா.

இதோ அந்த புகைப்படம்..