ஜாதிய விட்டு வெளிய வந்து தொலைங்கபா.. சரியான பதிலடி கொடுத்த அசோக் செல்வன்..

அசோக் செல்வன்
போர் தொழில், சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அசோக் செல்வன்.

சமீபத்தில் வெளிவந்த ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

பதிலடி..
இந்நிலையில் அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் படம் சம்பந்தமாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு ஒரு நபர், “ஜாதிய விட்டு கொஞ்சம் வெளிய வந்து தொலைங்கபா… அது தானா மாறுது, சும்மா அதையே நோண்டிட்டு இருக்காதீங்க… என்று பதிவிட்டு உள்ளார்.

பதில் அளித்த அசோக் செல்வன், “நீங்கள் ஓ மை கடவுளே திரைப்படத்திற்கு பார்த்ததற்கு மிக்க நன்றி. ஆனால், இப்படத்தை குறித்து அந்த மாதிரி யூகம் செய்வதற்கு முன்பு படத்தை பாருங்கள். இந்த உலகத்தின் அமைதிக்கு ஒற்றுமை தான் ஒரே வழி. நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள்” என்று பதிலடி கொடுத்து இருக்கிறார்.