நான் முதலமைச்சர் ஆனால்.. பல வருடங்களுக்கு முன்பே வைரலாகும் விஜய் பேசிய விடயம்

நடிகர் விஜய் தற்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி இருக்கிறார். அதற்கு பல சினிமா துறை நட்சத்திரங்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.

தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் பணிகளை முடித்துவிட்டு , முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என விஜய் தெரிவித்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது

நான் முதலமைச்சர் ஆனால்..
நான் முதலமைச்சர் ஆனால் இதை தான் செய்வேன் என பல வருடங்களுக்கு முன்பே விஜய் பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வீடியோ தான் அது.

“நான் முதலமைச்சர் ஆனால்.. நடிக்க மாட்டேன்.. உண்மையாக இருப்பேன் என சொன்னேன்” என விஜய் தெரிவித்து இருக்கிறார்.