எதிர்நீச்சல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று தான் எதிர்நீச்சல். பெண் அடிமை, ஆணாதிக்கம் போன்ற விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு நல்ல ரீச் உள்ளது.
தற்போது கதையில் தர்ஷினியை யாரோ கடத்தி செல்ல அவரை தேடும் முயற்சியில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி உள்ளனர், அவர்களுக்கு ஜீவானந்தமும் உதவி வந்தார்.
இதற்கு இடையில் சக்தி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரை பார்த்துக்கொள்ள ஆதிரையும் வந்துள்ளார். தற்போது கதிர், ஆதிரையிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.
கொண்டாட்டம்
இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரில் அவ்வப்போது வந்துபோகும் கதாபாத்திரத்தில் நடிக்கும் வைஷ்ணவி தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார், இதோ பாருங்கள்,
View this post on Instagram