நடிகர் விஜய் அரசியலில் குதித்து இருக்கும் நிலையில் அவருக்கு சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் சினிமாவில் இருந்து விலகுவதால் சினிமா துறைக்கு தான் மிகப்பெரிய நஷ்டம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஓட்டு போட மாட்டேன்
நடிகர் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என நடிகர் அரவிந்த் சாமி பேசி இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
“நான் ரஜினி சார் பெரிய fan, கமல் சார் பெரிய fan, விஜய் பிடிக்கும். ஆனாலும் அவர்களுக்கு நான் ஓட்டு போட மாட்டேன். போட கூடாது.”
“அவர்கள் சொல்லும் விஷயத்தில் எதாவது மாற்றம் வர போகிறதா, அவர்களால் முடியுமா, அவர்களது நோக்கம் எனக்கு பிடிக்க வேண்டும். ஒரு நடிகர், நல்ல govt policies உருவாக்க தகுதி இருக்கிறது என எப்படி நம்புறது” என அரவிந்த் சாமி கூறி இருக்கிறார்.