ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக திரும்பிய தருணம்

கடத்தல் கும்பலிடமிருந்து தர்ஷினி தப்பிச் சென்றுள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான்.

இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஏனென்றால் சீரியல் துவங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

காரசாரமான விவாதங்கள், புது புது டுவிஸ்ட்கள் என எதிர்நீச்சல் இயக்குநர் திருச்செல்வம் கதைக்களத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இப்படியொரு நிலையில் தர்ஷினி கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். ஜனனி மற்றும் மற்ற மருமகள்கள் இதுவரையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டத்தை முடிக்கும் குணசேகரன்

சக்திக்கு கார் மோதியதால் ஒரு வாரம் படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதனை தொடர்ந்து சக்திக்கு பதிலாக ஈஸ்வரிக்கு உதவிச் செய்ய ஜீவானந்தம் கதைக்குள் வருகிறார்.

இந்த நிலையில் உதவிச் செய்ய வந்த ஜீவானந்தத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். தற்போது யாரும் உதவிக்கு இல்லாமல் மருமகள்கள் மாத்திரம் தர்ஷினி தேடி அழைந்து கொண்டிருக்கிறார்கள். தர்ஷினியும் தற்காப்பு கலை தெரிந்த பிள்ளை என்பதால் கடத்தல் கும்பலில் இருந்தவர்களை அடித்து விட்டு தப்பி ஓடி வருகிறார்.

பின்னால் அடியாட்களும் துரத்தி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்கையைில், குணசேகரன் வீட்டில் அனைவரையும் மிரட்டிக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

இந்த சமயம் பார்த்து ஆதிரை, கதிர், ஞானம், சக்தி இப்படி சகோதரர்கள் அனைவரும் குணசேகரனுக்கு எதிராக திரும்பியுள்ளனர். இனி வரும் காலங்களில் குணசேகரின் ஆட்டம் திண்டாட்டமாக மாறும் என எதிர்வு கூறப்படுகின்றது.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கின்றது. அத்துடன், “குணசேகரன் இதனை காரணமாக வைத்து திருந்துவார்..” என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.