மருத்துவமனையில் அண்ணாமலை
கடந்த வாரம் இறுதி எபிசோடில் வீடு முழுக்க mosquito spray-வை அடித்தார் ஸ்ருதி. இதனால் அண்ணாமலைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஏற்கனவே மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அண்ணாமலைக்கு திடீரென இப்படி ஆனதால் மீனாவால் என்ன செய்யவது என்று தெரியாமல் பரிதவிக்கிறார்.
உடனடியாக ஒரு ஆட்டோவை பிடித்து, அதில் தனது மாமனார் அண்ணாமலையை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார் மீனா. இந்த தகவலை செல்லும் வழியில் முத்துவிற்கும் சொல்லிவிட்டார்.
கடும் கோபத்தில் முத்து
தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை அறிந்து மருத்துவமனைக்கு செல்கிறார் முத்து. அங்கு அண்ணாமலையை பரிசோதித்து பார்க்கும் மருத்துவர், mosquito spray தான் இதற்கு காரணம் என கூற கடும் கோபத்திற்கு ஆளாகிறார்.
மருத்துவமனையில் இருந்து அண்ணாமலையை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இதன்பின் என்ன நடக்க போகிறது என்று வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்..
இதோ ப்ரோமோ வீடியோ..