சினிமாவை போல சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெறுகிறார்கள். அப்படி விஜய் டிவி தொடர்களில் நடிக்கும் பலர் பாபுல்ராகி இருக்கின்றனர்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட தொடர்களில் நடிப்பவர் கம்பம் மீனா செல்லமுத்து. பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் அவர் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். இருப்பினும் பாக்கியலட்சுமி தொடரில் அவருக்கு ஹீரோயின் உடனேயே எப்போதும் இருக்கும் பாசிட்டிவ் ரோல் தான்.
விபத்து
கம்பம் மீனா செல்லமுத்து நேற்று விபத்தில் சிக்கி இருக்கிறார். படுகாயம் அடைந்த அவர் கை முறிந்து கட்டுடன் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
“நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)…..எல்லாம் அவன் செயல்” என அவர் கூறி இருக்கிறார்.
View this post on Instagram