பொதுவாகவே வெள்ளை நிறத்தில் பூக்களை கொண்டுள்ள தாவரங்களுக்கு மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுவதாக பண்டைய கால மருத்துவ குறிப்புகளில் காணப்படுகின்றது.
இந்த வகையில் சங்குப்பூ வெள்ளை மற்றும் ஊதா என இரு வகைகளில் கிடைக்கின்றது. சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக காடுகள், வேலிகளில் இந்த சங்குப்பூவை அதிகமாக காணக்கூடியதாக இருக்கும். இதனுடைய இலை, வேர், பூக்கள், விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
சங்குப்பூவை தொட்டு வீசும் காற்றை நாம் சுவாசித்தால் கூட சுவாசக் கோளாறு நீங்குமாம். அந்தளவுக்கு சங்குப்பூவில் ஏளாளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
சங்குப்பூவின் நன்மைகள்
குடற்புழுக்களை சுத்தகரிப்பது, சிறுநீரை பெருக்குவது போன்று பல குணங்கள் இதற்கு இருந்தாலும் கர்ப்பப்பை சார்ந்த மருத்துவ குணமானது விசேஷமான ஒன்றாகும். கர்ப்பப்பைக்கு இயற்கை கொடுத்த வரம் என்றே இந்த பூவை குறிப்பிடலாம்.
சங்குபூ டீயை பெண்கள் பருகுவது அவசியமான ஒன்றாகும். கர்ப்பப்பை சார்ந்த நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
சங்கு பூவின் சாற்றை அடிக்கடி பருகிவந்தால் உடல் வெப்பம் குறையும். தலை தொடர்பான நோய், கண் சார்ந்த நோய்கள், மந்தம் முதலியவையும் குறையும்.
சங்கு பூவின் சாற்றை அருந்தினால் கல்லீரல் வலுப்படும். தேமல், கரும்புள்ளிகள் கூட சரியாகும் என கூறப்படுகிறது. இரண்டு தேக்கரண்டி சங்குப்பூ சாற்றை, சரிசமமாக எடுத்து அதனுடன் இஞ்சி சாறு கலந்து கொள்ளுங்கள்.
அதனுடன் கொஞ்சம் தேன் விட்டு காலை, மாலை ஆகிய இரண்டு நேரத்திலும் அருந்த வேண்டும். இப்படி பருக வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து செறிமான அமைப்பு பலப்படும்.
இது சிறுநீரக நோய்களுக்கு நல்ல பலன் தரும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்லது. அதுமட்டுமில்லாமல் காய்ச்சலையும் கட்டுப்பாட்டுத்த சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.
உடலில் சர்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சங்கு பூ துணைப்புரிகின்றது. மேலும் மனஅழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் அதில் காணப்படுகின்றது.