சூரி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கி, இன்று கதாநாயகனாக ஜொலித்து வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என நகைச்சுவையில் கலக்கி வந்தார்.
இதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக என்ட்ரி கொடுத்த சூரி, அடுத்ததாக விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு, விவேக் உடன் சூரி
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் அல்வா வாசுவின் திருமணம் நடந்தபோது, அங்கு வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் கலந்துகொண்டனர். இதில் சூரியும் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..