விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தளபதி 69 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதுவே தனது கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன்பின் முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தளபதி 69 படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற பேச்சு பெரிதளவில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன். கார்த்திக் சுப்ராஜ், அட்லீ போன்றோர்களின் பெயர்கள் அடிபட்டாலும், உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
விஜய் கூட சண்டை
விஜய்யின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அருண் பாண்டியன் இடம் விஜய்யின் அரசியல் என்ட்ரி கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அருண் பாண்டியன் ‘விஜய்யுடன் நான் சண்டை போட்டு இருக்கிறேன், நிறைய பிரச்சனை இருக்கு. ஆனால், இந்த விஷயத்தில் அவர் செய்ததற்கு என்னுடைய பாராட்டுக்கள். பொதுவாக சினிமாவில் தன்னுடைய காலம் முடிந்தபின் தான் அரசியலில் இறங்குவார்கள். ஆனால், விஜய் தனது சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும்போதே துணிந்து இப்படியொரு முடிவு எடுத்துள்ளார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என கூறினார்.
விஜய் குறித்து நடிகர் அருண் பாண்டியன் பேசியது தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.