புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாணடோ தெரிவித்துள்ளார்.
புதிய கொள்கை
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம் என்றும் கடந்த 15 – 20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.
அத்துடன் வாகனங்கள் போன்ற ஏராளமான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
எனவே, புதிய கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவோம் என நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.