சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கும் அமரன் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் சண்டையில் வீர மரணம் அடைந்த 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த படம். கமல் ஹாசன் தயாரிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தினை இயக்கி வருகிறார்.

போராட்டம்
இந்நிலையில் அமரன் படத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இருப்பதாக கூறி சில அமைப்புகள் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கின்றன.

கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கி இருந்தது போலவே தற்போது கமல் தயாரித்து இருக்கும் அமரன் படத்திற்கும் சிக்கல் எழுந்திருக்கிறது.