நடிகை நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகிலும் தடம் பதித்தார்.
அட்லீயின் ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான நயன்தாரா, இப்படத்திற்காக தாதாசாகெப் பால்கே international film festival விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.
அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதே போல் சில இந்தி திரைப்படங்களுக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. ஆனால், இந்தி படங்கள் குறித்து அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
மேக்கப் போடாமல் இருக்கும் நயன்தாரா
39 வயதிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் மேக்கப் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் முதலில் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கும், தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களை வைத்து எப்படி மேக்கப் போதாவது என்பதை காட்டியுள்ளார். நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#GRWM ft. Nayanthara in 9Skin❤️✨ pic.twitter.com/eKl93FxkBS
— Nayanthara✨ (@NayantharaU) February 24, 2024