மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிவகுமார்

சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் 60களில் நடிக்க தொடங்கியவர். ஹீரோவாக சில படங்கள் நடித்து அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருக்கின்றனர்.

சால்வையை தூக்கி வீசிய சிவக்குமார்
நடிகர் சிவகுமார் சில வருடங்களுக்கு முன்பு பொது இடத்தில் செல்பி எடுத்த நபரின் போனை தட்டிவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து சிவகுமாரை பலரும் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க ஒரு நபர் வந்திருக்கிறார். அவரது கையில் இருந்து சால்வையை பிடிங்கி தூக்கி வீசி இருக்கிறார் சிவக்குமார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.