விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை முடித்தபின் தன்னுடைய 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும் அதன்பின், அரசியலில் முழு நேரம் கவனம் செலுத்துவேன் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி கொடுத்த திரைப்படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம் தான். இப்படத்தை பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமன் மற்றும் விஜய் இரண்டாவது முறையாக உன்னை நினைத்து படத்திற்காக இணைந்தனர்.
இருவருக்கும் இடையே பிரச்சனை
ஆம், சூர்யா நடிப்பில் வெளிவந்த உன்னை நினைத்து திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடித்து வந்தது விஜய் தான். சில காட்சிகள் கூட விஜய்யை வைத்து பாடமாக்கிவிட்டனர். ஆனால், திடீரென விஜய்க்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதனால், விஜய்க்கு பதிலாக சூர்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து உன்னை நினைத்து திரைப்படத்தை எடுத்தார் இயக்குனர் விக்ரமன். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.