கங்குவா
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் நிறைவடைந்தது. மேலும் தற்போது படத்திற்காக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்க துவங்கிவிட்டனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் கண்டிப்பாக அருமையான பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நாயகி திஷா பாட்னி நடித்து வருகிறார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் சம்பளம்
5 வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ள சூர்யா, கங்குவா படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் ரூ. 30 கோடி முதல், ரூ. 40 கோடி இருக்கும் என தெரிவிக்கின்றனர்.