சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஜோதிர்மயி. அவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இப்படி மாறிட்டாரே..
ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.
ஜோதிர்மயி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.