கமல் ஹாசன்
உலக சினிமாவே வியர்த்து பார்க்கும் அளவிற்கு பல திரைப்படங்களை கொடுத்தவர் கமல் ஹாசன். ஹே ராம், குணா, விஸ்வரூபம், மகாநதி போன்ற பல திரைப்படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\
ஆனால், அவருடைய கனவு படமான மருதநாயகம் படத்தை இதுவரை அவரால் எடுக்க முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 25% சதவீதம் முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பு நின்றுபோனது. இதன்பின் தொடர் பிரச்சனைகள் காரணமாக இப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
ஆனால், வேறு ஒரு ஹீரோவை வைத்து கண்டிப்பாக மருதநாயகம் படத்தை எடுப்பேன் என கமல் ஹாசன் கூறியுள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பிரம்மாண்டமாக இப்படத்தை அவர் அமைத்துள்ளார்.
மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்
இந்நிலையில், மருதநாயகம் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்தாராம். ஆம், நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என ரஜினிகாந்த் கேட்டுள்ளார். ஆனால், படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேர்வு செய்துவிட்டதால், வேறு எந்த கதாபாத்திரமும் இல்லாத காரணத்தினால் ரஜினியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக சம்பளமே வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.