அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் இளம் நடிகை

சமந்தா
முன்னணி நடிகையான சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால் படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா, மீண்டும் கதைகள் கேட்க துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் சமந்தாவின் புதிய படங்கள் அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி வரும் வெப் தொடர் சிட்டாடல். ஆங்கிலத்தில் உருவான இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். வருண் தவான் சமந்தாவிற்கு ஜோடியாக நடிக்கிறார். சமந்தா புதிதாக பாட்காஸ்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவித்ரா லட்சுமி
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பவித்ரா லட்சுமி. இவர் குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டார். இதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். மேலும் சதீஸ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து வருகிறார். இளம் நடிகை பவித்ரா லட்சுமியை பார்க்க சமந்தா போலவே இருக்கிறார் என பலரும் கூறுவார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சமந்தா போலவே உடை அணிந்து ஒரு முறை பவித்ரா லட்சுமி புகைப்படம் ஒன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த லுக்கில் அப்படியே சமந்தா போலவே இருக்கிறார் பவித்ரா லட்சுமி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..