புஷ்பா 2 இப்படி தான் இருக்கும்!!

ராஷ்மிகா மந்தனா
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து. மேலும் இப்படம் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் படம் பிரமாண்டமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அப்டேட்
சமீபத்தில் ஜப்பான் சென்ற ராஷ்மிகா மந்தனா, அங்கு அளித்த பேட்டியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர், “புஷ்பா 2 திரைப்படம் மிகவும் மிகப்பெரியதாக இருக்கும். இப்போது படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்துள்ளது. இந்தியா சென்றதும் புஷ்பா 2 படத்தின் பாடல் காட்சியில் நடிக்கவிருக்கிறேன்”. “இப்படத்தில் புஷ்பாவுக்கு மனைவியாக நடிப்பதால் சில பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறது. புஷ்பா 2 வில் அதிக டிராமா மோதல்களும் இருக்கும்” என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.