பூ பட நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதலா.. கிசுகிசு சொன்ன தனுஷ்

சிவகார்த்திகேயன் – தனுஷ்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் தனுஷ். சிவகார்த்திகேயனின் அடையாளமாகவே அது மாறியது.

எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் உருவான காக்கி சட்டை திரைப்படத்தில் நடித்தார் சிவா. இதன்பின் இருவருக்கும் இடையே பிரச்சனை என்றும், அதனால் மீண்டும் இருவரும் இணையவில்லை என்று ஏராளாமாக கிசுகிசு வெளிவந்தது. ஆனால், அவை யாவும் உண்மையில்லை, நாங்கள் இருவரும் நல்ல உறவில் தான் இருக்கிறோம் என கூறினார்கள்.

கிசுகிசு சொன்ன தனுஷ்
தனுஷ் நடிப்பில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று மரியான். இப்படத்தில் வரும் ஒரு காட்சியில் ‘அப்பன் சாமி மற்றும் மகன் சாமியின் பெயரை கொண்ட நடிகர், பூ நடிகையுடன் காதலா’ என வசனம் கூறுவார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயனுடன் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ், ‘மரியான் படத்தில் நான் சொன்ன கிசுகிசு சிவகார்த்திகேயனை பற்றி தான். அப்பன் சாமி சிவன் {சிவா}, மகன் சாமி முருகன் {கார்த்திகேயன்} பெயரை கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா என்று சிவகாத்திகேயனை நினைவில் வைத்து தான் அந்த வசனத்தை நானே கூறினேன்.

அந்த பூ பட நடிகை யார் என தொகுப்பாளினி கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் “மரியான் படத்தில் நடித்த நடிகை தான்” என நகைச்சுவையாக கூறினார். ஆனால், அது, அப்படியெல்லாம் எந்த நடிகையையும் நினைவிக்கவில்லை, சும்மா சொன்னது தான் அந்த வசனம் என தனுஷ் கூறினார்.