பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் அனிதா சம்பத். அவர் செய்தி வாசிப்பாளர் வேலையை விட்டுவிட்டு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அவர் பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக 84 நாட்கள் வரை இருந்தார். ஷோவில் அவர் பலரிடம் சண்டை போட்டதற்காக அதிகம் ட்ரோல்களை சந்தித்தார்.
பிக் பாஸுக்கு பிறகு அனிதா சம்பத் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
மாலத்தீவு ட்ரிப்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
அனிதா சம்பத் தற்போது அவரது கணவர் உடன் மாலத்தீவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அவர் சொந்தமாக youtube சேனல் நடத்திவரும் நிலையில் அதில் அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
மாலத்தீவு அரசு இந்தியா உடன் மோதலில் இருந்து வருகிறது. அங்கிருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற உதவிட்டு இருக்கிறது. இதனால் மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதை தவிர்த்து வருகின்றனர்.