பிரபல நடிகருடன் கீர்த்தி சுரேஷ் ரகசிய திருமணம்?

கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ரகு தாத்தா, கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

மேலும் தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகும் திரைப்படமே வருண் தவானுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணம்?
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சதீஸ் உடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வதந்தி ஒன்று பரவியது. பைரவா படத்தின் பூஜையின் போது. இருவரும் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருந்த புகைப்படத்தை வைரலாக்கி, இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனர் என கிசுகிசுக்கப்பட்டது.