ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறிவிட்டார் அட்லீ. இவர் அடுத்து யாருடைய படத்தை இயக்கப்போகிறார் என இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை.
ஒரு பக்கம் தளபதி 69 படத்தை அட்லீ தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு புறம் பேசப்பட்டு வருகிறது.
ஏனென்றால், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம் அட்லீ. அந்த படத்திற்கான வேளைகளில் தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம். ஆனால், இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
அட்லீ சம்பளம்
இதனால் தான் தொடர்ந்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வருகிறது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லீ கேட்டுள்ள சம்பளம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது.
ஆம், இப்படத்தை இயக்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லீக்கு ரூ. 60 கோடி சம்பளம் என்றால், கோலிவுட் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனராக மாறிவிடுவார். இந்தியன் 2 படத்திற்காக ஷங்கர் ரூ. 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.