சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்துடன், அதிரடி வசனங்களுடன், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.
இந்த தொடர் அண்ணாமலை குடும்பத்தை மையமாக கொண்டு அதிலும் முத்து-மீனா கதாபாத்திரத்தை முக்கியமாக வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது கதையில் முத்து, மீனாவிற்கு ஒரு கல்யாண ஆர்டர் வாங்க 500 மாலைகள் குடும்பத்துடன் கட்டி வருகின்றனர். இது விஜயா, மனோஜ், ரோஹினி 3 பேருக்கும் பிடிக்காமல் உள்ளனர்.
500 மாலைகள் மீனா சொன்னபடி கட்டி முடிக்கிறார்.
நாளைய புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்ததும் நாளைய எபிசோடிற்கான புரொமோ வெளியானது. அதில் முத்துவிடம் மாலை கொண்டு சென்றவர், மாலையுடன் எனது வண்டியும் காணவில்லை என ஷாக்கிங் தகவல் கூறுகிறார்.
இதனால் முத்து மிகவும் பதட்டம் அடைகிறார், இனி கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
சிட்டி அந்த மாலையை கடத்த ஏற்கெனவே பிளான் போட்ட நிலையில் எப்படி முத்து மாலையை சொன்னபடி கல்யாணத்திற்கு கொண்டு செல்கிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
View this post on Instagram