பாலிவுட் பக்கம் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் 2000ம் ஆண்டில் அஜித்தை வைத்து தீனா படம் இயக்கியதன் மூலம் இயக்குனராக களமிறங்கினார்.

2005ம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி, விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

விஜய்யின் 68வது படத்தை கூட ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அந்த கூட்டணி அமையவில்லை. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் இயக்கி வருகிறார்.

புதிய அப்டேட்
இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமா நடிகர்களை வைத்து படம் இயக்குவார் என்று பார்த்தால் பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

அதாவது நடிகர் சல்மான் கானை வைத்து ரூ. 400 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த தகவலை நடிகர் சல்மான் கானே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.