CAA-விற்கு எதிராக குரல் கொடுத்த விஜய்

விஜய்
நடிகர் விஜய் கடந்த மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை துவங்கினார். தமிழக வெற்றிக்கழகம் எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சமீபத்தில் தான், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர். இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்தது.

எதிர் குரல்
அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூக நடக்கும் ஓவ்வொரு விஷயத்திற்கும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது CAA சட்டத்திற்கு எதிராக தனது குரலை எழுப்பியுள்ளார்.

” சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA போன்ற சட்டங்கள் ஏற்புடையது அல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய்.