விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ஷோவின் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் ஏற்கனவே விலகுவதாக அறிவித்துவிட்டார். அவர் வேறு ஒரு புது நிகழ்ச்சியை நடத்த போவதாகவும், அதை பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறி இருந்தார்.
மேலும் குக் வித் கோமாளி ஷோவின் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனமும் விஜய் டிவி கூட்டணியில் இருந்து விலகுவதாக வருத்தத்துடன் அறிவித்துவிட்டனர்.
புது நடுவர்
இந்நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாம் சீசனில் செஃப் தாமு உடன் ஒரு புது நடுவரை களமிறக்க இருக்கிறதாம் விஜய் டிவி.
மெஹந்தி சர்க்கஸ் பட நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் புது நடுவராக வர இருக்கிறார். அவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார்.
அவர் குக் வித் கோமாளி ஷோவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.