நடிகர் மாதவன் தமிழில் அலைபாயுதே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர். தமிழ் மட்டுமின்றி அவர் ஹிந்தியிலும் ஏராளமான படங்கள் நடித்து பாலிவுட்டிலும் முக்கிய நடிகராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் ரிலீஸ் ஆன Shaitaan என்ற ஹிந்தி படத்திலும் நடித்து இருந்தார் மாதவன். அதில் ஜோதிகாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் நடித்த மாதவன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் மாதவன் தான் குடிபோதையில் ஒரு படத்தில் நடித்தது பற்றி பேசி இருக்கிறார். அமீர் கான் உடன் 3 இடியட்ஸ் படத்தின் ஒரு காட்சியில் தான் அப்படி நடந்ததாம்.
குடித்திருப்பது போல் நடிப்பதற்கு பதில் நிஜத்திலேயே குடித்துவிடலாம் என அமீர் கான் கூறியதால் ஷூட்டிங் தொடங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் குடித்துவிட்டார்களாம்.
குடித்துவிட்டு நார்மலாக இருப்பது போல நடிக்க வேண்டும் என நினைத்தாலும், படப்பிடிப்பில் வசனத்தை பேச முடியாமல் மாதவன் தள்ளாடினாராம்.