கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி

பிரியாமணி
தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி.

தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது அடுத்தடுத்து பிரியாமணிக்கு நிறைய பாலிவுட் வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

யானை பரிசு
இதுவரை எந்த நாயகியும் செய்யாத ஒரு விஷயமாக நடிகை பிரியாமணி செய்துள்ளார்.

கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகை பிரியாமணியும் பீட்டாவும் இணைந்து ஒரு இயந்திர யானையை கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு பரிசாக வழங்கி இருக்கிறார்கள்.

பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை பரிசாக அளிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பிரியாமணி கூறியுள்ளார். அந்த இயந்திர யானைக்கு மகாதேவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.