ராய் லட்சுமி
நடிகர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.
அதன்பின் குண்டக மண்டக, தர்மபுரி, காஞ்சனா, தாம்தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், தாண்டவம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ள இவர் அதிக படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆகியிருக்கிறார்.
கடைசியாக தமிழில் 2021ம் ஆண்டு சின்ரல்லா படம் நடித்தார், தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
இலங்கை பயணம்
அதிக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கிடைக்கும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார். எதில் இவர் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ இன்ஸ்டாவில் புகைப்டபங்கள் பதிவிடுவதில் அதிக ஆக்டீவாக இருக்கிறார்.
அண்மையில் அவர் ஒரு வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார், அதில் அவர் இலங்கைக்கு சென்றுள்ள வீடியோ இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு கிரிக்கெட் விளையாட்டை காண்பதற்காக இலங்கை சென்றுள்ளாராம்.
இதோ அவர் ஷேர் செய்த வீடியோ,
View this post on Instagram