இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்திய காசநோய் அறிக்கையின்படி,இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.,
“கடந்த ஆண்டு இந்தியாவில் 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
25.55 லட்சம் பேருக்கு காசநோய்
1960-ஆம் ஆண்டுகளில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், முதல் முறையாக 25.55 லட்சம் பேருக்கு மேல் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உயிரிழப்பு வீதம்
25.5 லட்சம் பேரில் 8.4 லட்சத்துக்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தனியார் மருத்துவமனைகள் மூலம் தெரியவந்தது.
காசநோயால் உயிரிழப்போரின் விகிதம் 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது 18 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு இந்திய காசநோய் 2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.