சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா. அவர் டிவி நிகழ்ச்சிகள், பேட்டிகள், விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
அவரது மகள் ஸாரா உடன் சேர்ந்து சொந்தமாக youtube சேனல் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
டிவி தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா அந்த வேலையை ஒருகட்டத்தில் உதறிவிட்டு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றார். ஆனால் அதனால் அவருக்கு நெகடிவ் ட்ரோல்கள் தான் அதிகம் வந்தது.
புது கார்
தற்போது அர்ச்சனா தனது மகள் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கூட்டி சென்று சொகுசு கார் வாங்கி இருக்கிறார்.
Mercedes-Benz GLC ரக காரை அவர் சுமார் ஒரு கோடி ருபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இதற்காக 25 வருடம் உழைத்ததாக அவர் கூறி இருக்கிறார்.
மேலும் புது கார் வாங்கிய நிலையில் எமோஷ்னலாக அர்ச்சனா கண்ணீர் விட்டு கதற, மற்ற குடும்பத்தினரும் அழுது இருக்கின்றனர்.
View this post on Instagram