அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பகுதியில் தந்தை ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கடும் வறுமையினால் உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தனது 2 பிள்ளைகளுக்கு உணவு, பானங்கள் மற்றும் கல்வியை வழங்க முடியாத நிலையில் இந்த குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இதேவேளை, அன்றாடம் உணவு இல்லாமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமான மனவிரக்தியில் இருந்த தந்தை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த குடும்பம் எந்த சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழும் எந்த உதவியும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.