மீண்டும் சினிமாவிற்கு வரும் வனிதா மகன்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதா
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானா இவர், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அங்கு ரம்யாகிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிகளுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆனால் இவர்கள் கடந்த 2005ம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அடுத்தடுத்து குடும்பவாழ்க்கை, பொதுவெளி என சர்ச்சையில் சிக்கும் வனிதா, எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து தனது வேலையை செய்து வருகின்றார்.

சினிமாவின் எண்ட்ரியாகும் மகன்
வனிதா தனது மகன் ஸ்ரீஹரி தன்னுடன் அனுப்பப்கோரி நீதிமன்றம் வரை சென்றார். ஆனால் ஆகாஷ் உடன் தான் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது.

பின்பு ஆகாஷ் உடன் வளர்ந்து வரும் ஸ்ரீஹரி சில மாதங்களுக்கு முன்பு குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார். தற்போது இவர் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் மாமா அருண் விஜய் போன்றும், துருவ் விக்ரம்

போன்று இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.