கோடிகளில் சொத்து குவித்து வைத்திருக்கும் நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன்
90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், கமல் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்தார்.

பல லட்சம் ரசிகர்களின் மனதை கவர்ந்த 90ஸ் கதாநாயகியான சிம்ரன் 48 வயதிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். சப்தம், வணங்காமுடி, அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன.

இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் கூட சிம்ரனின் மகன்களின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

சொத்து மதிப்பு
இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நடிகையாக பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நாயகி சிம்ரனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை சிம்ரனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை செய்து வருகிறார். கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி கொண்டிருக்கும் நடிகை சிம்ரன், இந்த ஹோட்டல் மூலம் லட்ச கணக்கில் லாபம் ஈட்டி வருவதாக சொல்லாடுகிறது.