பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா புதிதாக ரெஸ்டாரண்ட் தொடங்கிய நிலையில் அவருக்கு போட்டியாக கோபியும் ஒரு ஹோட்டல் திறந்து நடத்துகிறார்.
தனக்கு சமைக்க தெரியாது என்றாலும் செஃப் ஒருவரை வேலைக்கு வைத்து கொண்டு ஹோட்டல் நடத்துகிறார்.
அசிங்கப்பட்ட கோபி
தற்போது தான் செழியன் – ஜெனி பிரச்சனை முடிவுக்கு வந்து குடும்பத்தில் பெரிய சிக்கல் தீர்ந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கோபியின் ஹோட்டலில் ஒரு சிக்கல் வருகிறது.
செஃப் திடீரென லீவு போட்டுவிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார் கோபி. அது பற்றி அவரது அம்மாவிடம் சொல்ல, அவர் ஏற்பாடு செய்வதாக கூறி பாக்யாவிடம் இருந்து உணவு கொண்டு வர வைக்கிறார்.
‘சமைக்க தெரியலனா பரவாயில்லை, பிஸ்னஸ் தெரிந்தால் போதும் என வசனம் எல்லாம் பேசுனீங்க. இப்போ என்ன ஆச்சு’ என பாக்யா கோபியை அசிங்கப்படுத்தி கலாய்க்கிறார்.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரொமோவில் அது காட்டப்பட்டு இருக்கிறது. இதோ..