மஞ்சுமெல் பாய்ஸ்
சமீபகாலமாக மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 22 தேதி வெளியானது. இப்படம் கேரளா மட்டுமில்லாமல் கோலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்கள் அங்கு சந்திக்கும் விபரீதத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும்.
கூட்டணி?
கமல், ரஜினி, விக்ரம், சிம்பு எனப் பல பிரபலங்கள் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிதம்பரமை பாராட்டியுள்ளனர்.
தற்போது இயக்குனர் சிதம்பரம் மலையாள படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்தவுடன் நடிகர் விக்ரம் உடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை பொறுத்து இருந்து பார்ப்போம்.