தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்த நடிகை மும்தாஜ் திருமணம் செய்யாததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நடிகை மும்தாஜ்
டி ஆர் ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.
முதல் படம் சுமாராக ஓடினாலும், இவரது கவர்ச்சியான நடனம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
அதையடுத்து, மலபார் போலீஸ், குஷி, பட்ஜெட் பத்மநாபன், லூட்டி, சாக்லேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, கவர்ச்சி பிரபலமாகவும் மாறினார்.
குஷி படத்தில் விஜய்யுடன் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலுக்கு மிகவும் கிளாமராக நடனமாடி இன்றும் மறக்கமுடியாத நடிகையாக இருக்கின்றார். இந்த பாடல் மட்டுமின்றி மல மல மருதமல்லே என்ற பாடலும் பயங்கர ஹிட்டாகியது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் , கன்னடம் மொழிகளிலும் நடித்தார். பின்பு ராஜாதி ராஜ படத்தில் வில்லியாக நடித்த மும்தாஜ் அதன் பின்பு சினிமாவிலிருந்து விலகினார்.
பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் நோயால் அவதிப்பட்டு வருவதாக அந்நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
திருமணம் செய்யாத காரணம் என்ன?
சமீப காலமாக புர்காவில் மட்டும் இருக்கும் மும்தாஜ், அல்லாஹ்வை மனதார தான் ஏற்று கொண்டதாகவும், இதற்கு முன் தான் செய்த விஷயங்களை நினைத்து வருந்துவதாகவும் கூறினார்.
திருமணம் செய்யாததற்கான காரணம், இவருக்கு 25 வயதாக இருக்கும் போது ஆட்டோ இம்யூனிட்டி டிசார்டர் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் திருமண வாழ்வில் இருக்க முடியாது என்பதை உணர்ந்த இவர் திருமணம் செய்யாமல் இருப்பதாக கூறியுள்ளார்.