லவ்வர் பட நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட நபர்

லவ்வர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். அவருடைய நடிப்பில் வெளிவந்த குட்நைட் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தனர்.

சமீபத்தில் மணிகண்டன் நடித்திருந்த லவ்வர் திரைப்படமும் அவருக்கு வெற்றியை கொடுத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.

இப்படத்தில் ஹீரோயின் தோழியாக ஹரிணி சுந்தர்ராஜன் நடித்திருப்பார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வைரலாகும் பதிவு
இது குறித்து ஹரிணி சுந்தர்ராஜன் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், ” இன்று காலை என்னுடைய எக்ஸ் தளத்தில் சில முட்டாள்கள் டிஎம் செய்து இருக்கிறார்கள். லவ்வர் படத்தில் இடம்பெற்றுள் ஐஷுவைப் கதாபாத்திரத்தை பிடிக்காததால் என்னைத் திட்டி வருகின்றனர்.

ஒருவர் நடித்த கதாபாத்திரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவரை இழிவாகவும் அவமரியாதையாகவும் பேசுவது பரவாயில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என ஹரிணி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.