சினேகா
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் தான் நடிகை சினேகா. டாப் ஹீரோக்களுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த சினேகா, புன்னகை அரசி என்ற பெயரையும் எடுத்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
பேட்டி
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினேகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நானும் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பின்பும் பிரைவசிக்காக, நாங்கள் தனி தனியாக வாழ்ந்து வந்தோம். ஆரம்ப கட்டத்தில் வீடு கிடைக்கவில்லை. அதனால் நான் என் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.
கல்யாணம் முடிந்து 15 முதல் 20 நாட்கள் வரை அப்படி தான் இருந்தோம். குழந்தை பிறந்த பிறகு கவனம் எல்லாம் அங்கே சென்றுவிட்டது. தற்போது குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்ற கவலை வந்து இருக்கிறது. எங்கள் திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது.
அது மாதிரியான நேரத்தில் நாங்கள் இரவு டேட்டிங் செல்வோம். அந்த சமயத்தில் பல நினைவுகளை பற்றி பேசுவோம். அப்போது எங்களுக்கு இடையே உள்ள ஸ்பார்க் மீண்டும் வரும்.
எனக்கும் பிரசன்னாவுக்கு இடையே சண்டை அடிக்கடி வரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் சண்டை முடிந்த பிறகும் நாங்கள் இவருடைய கருத்தையும் புரிந்துகொள்வோம் என்று சினேகா கூறியுள்ளார்.