சிறுவயது புகைப்படம்
திரை பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
அந்த வகையில் தற்போது தமிழ், மலையாள மொழிகளில் பிரபலமான நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யார் தெரியுமா ?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, பிரபல நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் தான்.
மலையாள படங்களில் நடித்து வந்த இவர், மீன் குழம்பும் மண்பனையும் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து இவர் நடித்த பாவ கதைகள் வெப் தொடர்க்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர். இவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இவர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.