நடிகை சௌந்தர்யா
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் அறிமுகமானார்.
தமிழில் இவருக்கு அறிமுகத்தை கொடுத்த திரைப்படம் என்றால் அது பொன்னுமணி தான். ஆம், கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார்.
திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சொத்து
உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் பல கோடி சொத்துக்கள் இருந்துள்ளதாம். இதுகுறித்து அவர் உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்பட்டது. ஆனால், அதை சௌந்தர்யாவின் தாய் மற்றும் கணவரும் இருவரும் மறுத்துவிட்டனர். 31 வயதிலேயே அவர் உயில் எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பெயரில் இருந்து ரூ. 100 கோடி சொத்து சம்மந்தமான உயில் குறித்து மீண்டும் பேச்சு துவங்கியுள்ளது. சௌந்தர்யா எழுதிய உயிலை மறைத்து அவருடைய தாய் மற்றும் கணவர் இருவரும் அந்த சொத்துக்களை பாதி பாதியாக பங்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் தற்போது உலா வரும் நிலையில், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.