25 நாட்களில் ஆடுஜீவிதம் படம் செய்துள்ள வசூல்..

ஆடுஜீவிதம்
சமீபகாலாமாக மலையாள திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை ப்ரேமலு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. அந்த வரிசையில் தற்போது ஆடுஜீவிதம் திரைப்படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

வசூல் சாதனை
பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான இப்படம் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், தற்போது 25 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிவருகிறது ஆடுஜீவிதம்.

இந்த நிலையில், இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 25 நாட்களாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஆடுஜீவிதம் படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.